கைதுகள் தொடர்பில் படைத்தலைமைகளுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கைதுகள் தொடர்பில் படைத்தலைமைகளுக்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வு இடம்பெறும் நிலையில் பொலிஸ் மற்றும்படைத்தலைமைகளுக்கு கைதுகள் மற்றும் தடுத்து வைத்தல் தொடர்பில் புதிய அறிவுறுத்தல்கள்விடுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் ஆணையாளர் செய்ட் ராட் ஹுசைன்எதிர்வரும் 27ம் திகதியன்று அறிக்கை சமர்ப்பிக்கவுள்ள நிலையிலேயே இந்தஅறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யும் ஒருவர் அவரை தமது பதவி தரம் உட்பட்ட வகையில்அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்.

பெண்கள் தொடர்பான கைது நடவடிக்கைகள், தேடுதல்கள் பெண் அதிகாரிகளாலேயேமேற்கொள்ளப்பட வேண்டும். பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கே இந்த அறிவுறுத்தல்கள்பொருந்துகின்றன.

இது ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வெளியிட்ட அறிவுறுத்தல்களுக்குசமமான அறிவுறுத்தல்கள் என்று கூறப்படுகின்றன