உடன் அமுலாகும் வகையில் கொழும்பின் 3 காவல்துறை பிரிவுகளுக்கு காவல்துறை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
காலிமுகத்திடலில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னிணைப்பு
நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமுலாகும் என்று காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.