கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில், பெப்ரவரி மாதம் முதன்மை பணவீக்கம் 50.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத் தகவல்களின்படி, ஜனவரி மாதம், முதன்மை பணவீக்கம் 51.7 சதவீதமாக காணப்பட்டது.
அதேநேரம், ஜனவரி மாதத்தில் 60.4 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், பெப்ரவரி மாதத்தில் 54.4 சதவீதமாக பதிவாகியுள்ளது.
47.9 சதவீதமாக இருந்த உணவல்லா பணவீக்கம், 48.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுடன் தொடர்புடைய பணவீக்கம், 72.1 சதவீதத்திலிருந்து, 69.2 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதென தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் அடிப்படையில்