இந்திய விஸா மையத்தில் கொள்ளையா? – பொலிஸார் தீவிர விசாரணை


இந்திய விஸா மையத்தில் கொள்ளையா? – பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு – பம்பலபிட்டி பகுதியிலுள்ள இந்திய

கொழும்பு – பம்பலபிட்டி பகுதியிலுள்ள இந்திய விஸா மையத்திற்குள் நேற்றிரவு கொள்ளையர்கள் நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய விஸா நிலையத்திலிருந்து பெறுமதியான பொருட்கள் சில கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மையத்தின் இரண்டாவது மாடியிலுள்ள ஜன்னல் ஒன்றின் ஊடாகவே கொள்ளையர்கள் உள் நுழைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சில பொருட்கள் மாத்திரமன்றி, பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை.

சம்பவ இடத்திற்கு சென்றுள்ள விசாரணை அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருவதுடன், விரைவில் முழுமையான தகவல்களை வௌியிட முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.