கோட்டாவிடம் இன்றும் விசாரணை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோட்டாவிடம் இன்றும் விசாரணை

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

ரக்னா லங்கா நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை 9.00 மணியளவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் சாட்சி வழங்குவதற்காக கடற்படை அதிகாரிகள் நால்வரும் ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியுள்ளார்.

இன்றைய விசாரணைகளுக்காக பிரதிவாதிகளும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதுடன், பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் சாட்சியமளிப்பவர்களிடம் குறுக்கு விசாரணைகளை மேற்கொள்வதாகவும் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தகவல – அத தெரண