கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் ஐ.தே.கட்சி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோத்தபாயவை கைது செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் ஐ.தே.கட்சி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை எப்படியாவது சிறையில் அடைக்க வேண்டும் என்ற கடும் நிலைப்பாடடில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐக்கிய தேசியக்கட்சியினர் இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தரப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு தரப்பினருக்கு இடையில் கடும் கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அவன்கார்ட் சம்பவம் ஊடக கோத்தபாய ராஜபக்சவை கைது செய்யும் முயற்சித்து தோல்வியடைந்தது.

இதனால், மாற்று வழி குறித்து கவனம் செலுத்தி வரும் ஐக்கிய தேசியக் கட்சி, பிரகீத் எக்நேலிகொட காணாமல் போன சம்பவம், லசந்த விக்ரமதுங்க, வசீம் தாஜூடீன் கொலைகள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் இருப்பதாக அந்த கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படுவதை கடுமையாக எதிர்க்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடாத பட்சத்தில் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த உத்தேசத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.