முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்


முட்டை மற்றும் கோழி இறைச்சி விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் முட்டை மற்றும் கோழி இறைச்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளதுடன் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது முட்டையின் விலை 32 முதல் 33 ரூபாய் வரையிலும், கோழிக்கறி 850 முதல் 900 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை மற்றும கோழி இறைச்சி விலை உயர்வால் முட்டை சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து கோழி மற்றும் முட்டை வியாபாரிகள் கருத்து தெரிவிக்கையில், கோழி தீவனத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.