கோவிட் தடுப்பூசி சான்றிதழ் – அட்டை கட்டாயமாகவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்


கோவிட் தடுப்பூசி சான்றிதழ் – அட்டை கட்டாயமாகவுள்ள பொது இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதியின் பின்னர், முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான கோவிட் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி சான்றிதழ் (தடுப்பூசி அட்டை) கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் 14.4 மில்லியன் மக்கள் இரண்டு கோவிட் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். எனினும், 7.7 மில்லியன் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்.

இந்தநிலையில் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக அடுத்த 2 வாரங்களுக்குள் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறு தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே கோரியுள்ளார்.

தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களுக்கு செல்லும் போது குறித்த தடுப்பூசி அட்டை கட்டாயமக்கப்படவுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அவ்வாறான பொது இடங்கள் தொடர்பான பட்டியல் வெளியிடப்படும்.

இதன்படி, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு பின்னர் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே அவ்வாறான பொது இடங்களுக்கு அனுமதிக்கப்படுவர்.

20 வயதுக்கு மேற்பட்டோர் மூன்று தடுப்பூசிகளையும் (பூஸ்டர் டோஸ்) பெற்றிருந்தால் மாத்திரமே அது முழுமையான தடுப்பூசியான கணக்கில் கொள்ளப்படும்.

16 முதல் 19 வயதுக்கு இடைப்பட்டோர் முதல் இரண்டு தடுப்பூசிகளும் பெற்றிருந்தல் வேண்டும் என தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது தொடர்பில் வௌிவந்த அறிவிப்பு