கோஹ்லியுடன் காதல்: அனுஷ்கா கூறிய பதில் இதுதான்!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கோஹ்லியுடன் காதல்: அனுஷ்கா கூறிய பதில் இதுதான்!

இந்திய கிரிக்கெட் அணியின் கோஹ்லி காதலியான அனுஷ்கா சர்மா காதலை மறைப்பவர் நான் கிடையாது என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் போட்டிகளின் தலைவரான கோஹ்லியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம்.

ஆனால் அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாகவும், தற்போது மீண்டும் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து கோஹ்லியோ, அனுஷ்காவோ எந்த ஒரு விளக்கமும் தர வில்லை.

இதுவரை கருத்து கூறாமல் இருந்த அனுஷ்கா தற்போது அதற்கான ஒரு விளக்கத்தை கூறியுள்ளார். அதில், காரில் உள்ள கருப்பு கண்ணாடிகள், காரின் உள்ளே உள்ள பல விஷயங்களை மறைக்கின்றன, அது போல தான் தன் காதலை மறைப்பவர் கிடையாது என கூறியுள்ளார்.

மேலும் இது குறித்து அனைவரிடமும் சொல்ல வேண்டும் அல்லது சொல்லக்கூடாது என என்னைகட்டாயப்படுத்த முடியாது என கூறி அனைவரையும் குழப்பியுள்ளார்.