கௌஷல் சில்வாவின் உடல் நிலை முன்னேற்றம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


கௌஷல் சில்வாவின் உடல் நிலை முன்னேற்றம்

பயிற்­சியின் போது பந்து தலையில் பட்டு காய­ம­டைந்த ­ இலங்கை கிரிக்கெட் அணி வீரர் கௌஷல் சில்வா, விமானத்தின் மூலம் கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். சில்வாவுக்கு பார­தூ­ர­மான காயம் எதுவும் இல்­லை­யெ­னவும், ஆனாலும் அவர் தொடர்ந்தும் மருத்­து­வர்­களின் கண்காணிப்பில் இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கண்டி பல்­லே­கலை சர்­வ­தேச கிரிக்கெட் மைதா­னத்தில் இலங்கை அணி 2 நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்­டியில் விளை­யாடி வரு­கின்­றது.

இந்தப் பயிற்­சியில் ஈடு­பட்­டி­ருந்­த­போதே கௌஷால் சில்வா காய­ம­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து விசேட விமானம் மூலம் பல்­லே­கலை மைதா­னத்தில் இருந்து கௌஷால் உட­ன­டி­யாக கொழும்­புக்கு அழைத்­து­வ­ரப்­பட்­டார்.