சகல முஸ்லிம் சட்டங்கள் தொடர்பிலும் திருத்தம் செய்வதற்கு அவதானம்


சகல முஸ்லிம் சட்டங்கள் தொடர்பிலும் திருத்தம் செய்வதற்கு அவதானம்

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நியமிக்கப்ப்டட குழு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்க்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பில் மதிப்பீடு செய்து , முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வயதை 18 ஆக அதிகரிப்பதற்கும் திருமணத்தின் போது சாட்சி கையெழுத்திடுவதற்கு பெண்களுக்கு வாய்ப்பளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன பலதார திருமணங்கள் தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டம் தவிர்ந்த, சகல முஸ்லிம் சட்டங்கள் தொடர்பிலும் மதிப்பீடு செய்து , மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முறைமை தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.