சஜின்வாஸின் யானைக் குட்டி பறிமுதல்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சஜின்வாஸின் யானைக் குட்டி பறிமுதல்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவிடம் இருந்த யானைக் குட்டி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. நீண்ட காலமாக சட்டவிரோதமான முறையில் சஜின்வாஸ் குணவர்தனவினால் யானைக் குட்டி வைத்திருப்பதாக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பின்னர் அந்த திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து குறித்த யானைக் குட்டி கை்பபற்றப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் போது அரசுக்கு நெருக்கமானவர்கள், தேரர்கள் சிலர், நீதிபதி ஒருவருக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட விரோதமாக யானைக் குட்டிகள் வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன்.

இது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது இடம்பெறுவதுடன் அந்த விசாரணைகளின் பிரதிபலனாகவே சஜின்வாஸ் குணவர்தனவிடம் இருந்த யானைக் குட்டி கைது செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் தினங்களில் உடுவே தம்மாலோக தேரர் மற்றும் திலின கமகே நீதவானிடம் இருக்கும் யானைக் குட்டிகளும் கைது செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது.