சந்திரிக்காவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரும் வாசுதேவ

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சந்திரிக்காவுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரும் வாசுதேவ

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இரண்டு தனியார் நிதியங்களுக்கு நிதி வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தனியார் நிதியங்களுக்கு நிதி வழங்கியுள்ளதாகவும் இது குறித்து உடனடியாக விசாரணைகளை நடத்துமாறும் வாசுதேவ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தொடர்பான இந்த விசாரணைகளை ஏனைய விசாரணைகளை போல் நடத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது தனிப்பட்ட இரண்டு நிதியங்களுக்கே இவ்வாறு நிதியை மாற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.