சமகால அரசாங்கத்திற்குள் நெருக்கடி! நேரடியாக களமிறங்குகிறார் பிரதமர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சமகால அரசாங்கத்திற்குள் நெருக்கடி! நேரடியாக களமிறங்குகிறார் பிரதமர்

சமகால அரசாங்கம் மற்றும் சிவில் அமைப்பு பிரிதிநிதிகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை தீர்ப்பதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரடியாக தலையிட தீர்மானித்துள்ளார்.

பெல்ஜியத்திற்கான விஜயத்தை நிறைவு செய்துக் கொண்டு நேற்று பிரதமர் நாடு திருப்பியிருந்தார்.

அரசாங்கத்தை அதிகாரத்தில் நியமிப்பதற்காக செயற்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் அரசாங்கத்திற்கு இடையில் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வதற்காக பிரதமர் இன்று முதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி பதவிக்கு நியமிப்பதற்காகவும், தற்போதைய அரசாங்கத்தை அதிகாரத்தில் நியமிப்பதற்காக செயற்பட்ட அனைத்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளை எதிர்வரும் இரண்டு நாட்டுகளுக்குள் பிரதமர் தனிப்பட்ட ரீதியில் சந்திக்கவுள்ளார்.

அதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இந்த பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தினை தொடர்ந்து, சிவில் அமைப்புகளும் தமது அதிருப்பதியை வெளியிட்டிருந்தனர்.

ஜனாதிபதி எச்சரிக்கையான உரையின் மூலம் மோசடியாளர்களை பாதுக்காக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக சிவில் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன