சமுர்த்தி கொடுப்பனவுகள் இழக்கப்படும் அபாயம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சமுர்த்தி கொடுப்பனவுகள் இழக்கப்படும் அபாயம்

தற்போது வழங்கப்பட்டு வரும் சமுர்த்தி கொடுப்பனவுகளானது எதிர்காலத்தில் நிறுத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதுவரை சமுர்த்தி கொடுப்பனவுகள் பெறாதவர்கள் என்று அடையாளப்படுத்தப்படுபவர்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

திவிநெகும வங்கி மற்றும் பிரஜா சங்கம் ஆகியவை தொடர்பில் இன்று பதுளையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.