சரத் பொன்செகா – ஹரீன் மோதல்; நடந்தது என்ன?


சரத் பொன்செகா – ஹரீன் மோதல்; நடந்தது என்ன?

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்ணான்டோ மற்றும் சரத் பொன்சேகா ஆகிய இருவருக்கும் இடையில், கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இவ்விருவரும் பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் சுதந்திர சதுக்கத்தில் நேற்று (1) நடைபெற்றுக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சரத் பொன்சேகா ஹரீன் எம்.பியை அழைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் உரையாற்றுவதற்கு முன்னர் தனக்கு உரையாற்ற வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார்.

எனினும் அவ்வாறு செய்ய முடியாது. நிகழ்ச்சி நிரலுக்கு அமையவே உரையாற்ற முடியும் என ஹரீன் பதிலளித்துள்ளார்.

அவ்வாறு எனில், தான் செல்கிறேன் என எழுந்த சரத் பொன்சேகாவை ஹரீன் தடுத்துள்ளார், கோபப்படாதீர்கள். பொறுமையாக இருங்கள் என அமைதிப்படுத்தியுள்ளார்.

ஆனால் தனது கோபத்தை ஹரீனிடம் வெளிகாட்டிய பொன்சேகா, ஹரீன் எம்.பியின் கையை பிடித்து முறுக்கியுள்ளார். ஹரீன் எம்.பியும் ஆத்திரமடைந்துவிட்டார். எனினும், அருகிலிருந்த ரவூப் ஹக்கீம் மற்றும் மனுச நாணயக்கார ஆகியோர் இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளனர்.

இறுதியில் கூட்டம் நிறைவடைந்த்தும் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.

சரத் பொன்சேகா எம்.பியின் மனைவி சமைத்த இடியப்பத்தை உண்ட பின்னேரே ஹரீன் எம்.பி தனது வீட்டுக்குச் இரவு 9 மணிக்குப் பின்னர் சென்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவித்துள்ளன.