சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு இலங்கைக்கு அவசியமானதாக இருந்தாலும், நிஜத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு போதுமானதாக இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ள அவர், “இலங்கையின் வளர்ச்சியை உருவாக்குவதே தற்போதைய சவாலாகும்.
எனினும், தேவைகள் மோசமடைந்து வரும் நிலையில், இழக்கப்படும் தொழில்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
எனவே தேவையான வளர்ச்சியை உருவாக்க, உள்நாட்டில் இயங்கும் வர்த்தகம் அல்லாத வளர்ச்சி எதிர்வரும் காலங்களில் போதுமானதாக இருக்காது.
இதற்காக ‘சுவர்களை தகர்த்து உலகிற்கு பாலங்கள் கட்டப்பட வேண்டும்’ என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில் சீர்திருத்தங்கள் இல்லாமல் உள்நாட்டு தீர்வு உள்ளது என்று மேடைகளில் கூறுவது சாத்தியமற்ற அம்சமாகும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனைய புதிய செய்திகள் – இதையும் பாருங்கள்!
- உலகத் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை அளிக்கும் ஆதாரங்களுடன் வருவேன்!
- நாட்டில் பெரும்பாலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்!
- உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள்!
- நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் பாரிய நிலநடுக்கம்!
- imfக்காக வட்டி விகிதங்களை உயர்த்திய இலங்கை மத்திய வங்கி!
- இந்தியாவுக்கு மீண்டும் நன்றி தெரிவித்த அலி சப்ரி!
- சி.ஐ.ஏ இன் பணிப்பாளர் ரகசிய விஜயம் – இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
- கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ரணில் தொலைக் காணொளி கலந்துரையாடல்!
- உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் விரைவில் தீர்மானம்!
- இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பது தொடர்பிலான பிரேரணை
சர்வதேச நாணய நிதியத்தின் பிணை