சவூதியில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இதுவரை கொண்டு வரப்படவில்லை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சவூதியில் உயிரிழந்த இலங்கையரின் சடலம் இதுவரை கொண்டு வரப்படவில்லை

சவுதி அரேபியாவின் வீடொன்றில் சாரதியாக பணியாற்றச் சென்று உயிரிழந்த 30 வயதான நபரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, அவரது உறவினர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது சகோதரர் இறந்து 15 நாட்களாகியும் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவர முடியாதுள்ளதாக, இறந்தவரின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

2014ம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் அவர் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக சவுதிக்கு சென்றுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 25ம் திகதி திடீர் சுகயீனமடைந்த குறித்த நபர் கடந்த 10ம் திகதி உயிரிழந்ததாக அவர் பணிபுரிந்த வீட்டு உரிமையாளர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இது இவ்வாறு இருக்க இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரர் கருத்து வௌியிட்டுள்ளார்.

எதுஎவ்வாறு இருப்பினும் இறந்தவரின் சடலத்தை இலங்கைக்கு எடுத்து வர நடவடிக்கை எடுக்குமாறு, வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் வௌிவிவகார அமைச்சு ஆகியோருக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ள போதும், இதுவரை சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை என அவரது சகோதரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் – அத தெரண