சஹ்ரானின் வாகனத்தை பயன்படுத்தினாரா சரத் வீரசேகர? சர்ச்சையாகியுள்ள விடயம்


சஹ்ரானின் வாகனத்தை பயன்படுத்தினாரா சரத் வீரசேகர? சர்ச்சையாகியுள்ள விடயம்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு தலைமை தாங்கிய சஹ்ரான் ஹாஷிம் பயன்படுத்திய Toyota Land Cruiser V8 என்ற வாகனத்தை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பயன்படுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பில், பாராளுமன்றத்தில் ஹரின் பெர்ணான்டோ கேள்வியெழுப்பினர்.

அதற்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, “ இதுதொடர்பில் எனது செயலாளரிடம் வினவினேன். அந்த வாகனம், அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அதனை, விசேட அதிரடிப்படை பயன்படுத்தியுள்ளது. நான் பயன்படுத்தவில்லை என்றார்.

இதனிடையே ​கேள்வியெழுப்பிய அனுரகுமார திஸாநாயக்க, “ வழக்கு பொருளை, எப்படி பயன்படுத்த முடியும்” என வினவினார்.