சாதனை படைத்தார் யூனிஸ்கான்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சாதனை படைத்தார் யூனிஸ்கான்

பாகிஸ்தான் அணி வீரரான யூனிஸ்கான், 35 வயதுக்கு பிறகு 13 சதங்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.

பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது.

முதலில் வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்கவே, ஆசாத் ஷபிக் மட்டும் 68 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த யூனிஸ்கான் சூப்பராக விளையாடி 33வது சதத்தை எட்டினார், இது 35 வயதுக்கு பிறகு எடுக்கும் 13வது சதமாகும்.

இதன்மூலம் சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), கிரஹாம் கூச் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட் (இந்தியா) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.

இவர்கள் 35 வயதுக்கு பிறகு 12 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

யூனிஸ்கான் 127 ஓட்டங்கள் (205 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், முதல்நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் எடுத்துள்ளது.