நேற்று அமைச்சுப் பதவி பெற்ற சாந்த பண்டார தற்கொலை செய்து கொண்டார் – மைத்திரி தெரிவிப்பு


நேற்று அமைச்சுப் பதவி பெற்ற சாந்த பண்டார தற்கொலை செய்து கொண்டார் – மைத்திரி தெரிவிப்பு

நாட்டு மக்களால் கடுமையாக வெறுக்கப்படும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை பெற்று சாந்த பண்டார தனது அரசியல் வாழ்க்கையை தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த அரசாங்கத்தில் அமைச்சு, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடுவதற்கு நான் தெளிவற்றவனாக இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், எனக்கு அறிவித்ததன் பின்னர்தான் இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக் கொண்டதாக அவர் குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்றும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.