சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சார்க் மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டது

எதிர்வரும் நவம்பர் மாதம் பாகிஸ்தானின் இஸ்லாமபாத்தில் இடம்பெற இருந்த 19வது சார்க் மாநாட்டை பிற்போடுவதாக பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்த மாநாடு இடம்பெறும் புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து, மாநாட்டை புறக்கணிக்க போவதாக இந்தியா முன்னதாக அறிவித்திருந்தது.

இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணிக்க போவதாக ஆப்கானிஸ்தான், பூடான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளும் அறிவித்தன.

இந்நிலையியே இம்மாநாடு திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளது.

(அத தெரண)