நிகழ்ச்சியின் முடிவில், நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் நன்றி தெரிவித்துப் பேசுகையில், “நாங்கள் இந்த நிகழ்ச்சியை துவங்கும் பொழுது நிறைய கேள்விகளை எதிர்கொண்டோம். அதையெல்லாம் மீறி இன்று இந்தப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளோம்.

அதற்கு நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். முக்கியமாக நடிகர் ரமணா வின் யோசனை தான் இந்தப் போட்டிக்கான தொடக்கம். அதற்காக அவருக்கு எங்கள் அனைவரது சார்பாகவும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார்,உலக நாயகன் கமலஹாசன் சார், விக்ரம் சார்,மம்முட்டி சார்,பாலகிருஷ்ணா சார்,வெங்கடேஷ் சார், சுதீப் சார், சிவராஜ்குமார் சார்,திரையுலகின் மூத்த நட்சத்திரங்கள்,மற்றும் எட்டு அணிகளின் கேப்டன்கள்,ஸ்பான்சர்கள், அனைத்து PRO க்கள், புரொடக்‌ஷன் மேனேஜர்கள், FEFSI, ஐசரி கணேஷ் சார், டான்சர்ஸ்,பாரம்பரிய இசைக்கலைஞர்கள், சென்னை கார்ப்ரேஷன்,காவல்துறை, எல்லாவற்றிற்கும் மேலாக  ரசிகர்கள்,இவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.

சன் ரி வி நிறுவனத்திற்கு எங்களது நன்றி.  உங்கள் அனைவரது ஆசிகளுடன் நடிகர் சங்க கட்டடத்தினை சிறப்பாகக் கட்டுவோம் என உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

இவ்விழாவின் போது நடிகர் சீயான் விக்ரமின் பிறந்த நாள் விழாவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன் போது பேசிய விக்ரம், ‘எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, உலகம் முழுவதுமுள்ள தமிழர்களுக்கும்,எனது ரசிகர்களுக்கும், எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் ரசிக்கும் நடிகர்களுக்கு ரசிகனாகத் தான்,நான் இங்கே வந்திருக்கிறேன். இப்படி ஒரு சர்ப்ரைஸ் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி’ என்று பேசினார்.

தகவல் : சென்னை அலுவலகம்

IMG_9030