சிபெட்கோ (Ceypetco fuel prices) எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?


சிபெட்கோ (Ceypetco fuel prices) எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

லங்கா ஐஓசி (Lanka ioc petrol price) நிறுவனம் நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது (Fuel price increase).

இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐ.ஓ.சி (Lanka ioc petrol price) இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது.

டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாவில் இருந்து 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

283 ரூபாவாக இருந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 332 ரூபாவாகும்.

யூரோ 03 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 263 ரூபாவில் இருந்து 312 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா ஐஓசி பெட்ரோல் விலை அதிரடியாக மீண்டும் அதிகரிப்பு

நிறுவனம் விற்பனை செய்யும் ஒட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் விலைகள் திருத்தப்படவில்லை.

இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் விலைகள் (Ceypetco fuel prices in Sri Lanka) தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,

தற்போதைய நிலையில் சிபெட்கோவின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவித்தார்.

கடந்த முறை லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருட்களின் விலையை அதிகரித்தபோது, அதன் அதிகாரிகளை அழைத்து, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விலையுடன் (Ceypetco fuel prices in Sri Lanka) அதனை சமப்படுத்துமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அது தொடர்பான ஒப்பந்தத்தை ஆராய்ந்து, அதில் தங்களுக்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்க முடியும் என்பது குறித்து ஆராயுமாறு தமது செயலாளருக்கு அறியப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாக அழுத்தம் கொடுக்க முடியுமாயின், எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து, அமைச்சரவையைத் தெளிவுபடுத்தி அவசியமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேநேரம், பெற்றோலியக் கூட்டுத்தாபன எரிபொருள் விலை (Ceypetco fuel prices) தற்போது அதிகரிக்கப்பட மாட்டாது என வலுசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.