சிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) என்பவர் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளராக பதவி வகிக்கவில்லை எனவும் அப்படியான பதவி எதனையும் பிரதமரின் அலுவலகம் வழங்கவில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
பிரதமரின் முஸ்லிம் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளராக கடமையாற்றுவதாக கூறி, சிராஸ் யூனுஸ் வெளியிட்டு வரும் கருத்துக்களுக்கும், பிரதமரின் அலுவலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புச் செயலாளர் பதவியோ, வேறு எந்த பதவிகளோ சிராஸ் யூனுஸ் என்பவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே அன்றி, அவற்றுடன் பிரதமருக்கோ, பிரதமரின் அலுவலகத்திற்கோ எவ்வித தொடர்பும் இல்லை என்பதுடன் அவரது கருத்துக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.