சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த அயல்வீட்டு குடும்பஸ்தர் கைது

பொகவந்தலாவ கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரத்துக்கு முயற்சித்த 35 வயது குடும்பஸ்த்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபரை நேற்று மாலை பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பெற்றோர்கள் வீட்டில் இல்லாதபோது வீட்டில் தனித்திருந்த சிறுமியிடம் அயலில் வசிக்கும் நபரொருவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த வேளை மேற்படி சிறுமி அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து தனக்கு ஏற்பட்ட நிலையை விபரித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றதாக சிறுமியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் முறைபாட்டினை பதிவு செய்து கொண்ட பொலிஸார் கிவ் கிழ் பிரிவு தோட்டத்தில் வைத்து கைது செய்து விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்

குறித்த சிறுமி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபடவுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட சந்தேகநபர் இன்று ஹற்றன் நீதவான் முன்னிலையில் அஜர்படுத்தபடவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நிரூபர்