சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை ஊரை விட்டு விரட்டக் ​கூறி ஆர்ப்பாட்டம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவரை ஊரை விட்டு விரட்டக் ​கூறி ஆர்ப்பாட்டம்

12வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கபடும் சந்தேகநபரின் குடும்பத்தினரை வெளியேறுமாறு கோரி பிரதேச மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வட்டவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் வெலிஒயா கிழ் பிரிவு தோட்டத்தில் 12வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 55 வயது சந்தேக நபருக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்பட்டது.

குறித்த சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டமையினால் அவரின் குடும்பத்தாரை வெலிஒயா தோட்டத்தை விட்டு வெளியேற கோரி இன்று காலை வெலிஒயா தோட்ட மக்களால் கவனயீர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை சம்பவ தினத்தன்று சந்தேகநபரை தாக்கியதாக கூறி கைது செய்யபட்ட ஆறுபேரையும் விடுதலை செய்யும் வரை இந்த ஆர்ப்பாட்டம் தொடருமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட வெலிஒயா மக்கள் தெரிவித்தனர்.

நிரூபர்-

 

200599605Protest