சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!


சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக எச்சரிக்கை!

சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை

சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை

தற்போது சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை அதிகரித்து வருவதாக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் வைத்திளர் ஜீ.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

தொண்டை வலி, காய்ச்சல் மற்றும் இருமல் என்பன இதற்காக நோய் அறிகுறிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களில் 12 ஆயிரத்து 496 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு முதல் இரண்டு மாதங்களில் நாட்டில் 9 ஆயிரத்து 435 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் டெங்கு நோய் பரவுவதை தடுப்பதற்காக தங்களது சுற்றுத் சூழல் தொடர்பில் பொது மக்கள் அவதானம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 

சிறுவர்களிடையே வைரஸ் நோய் நிலைமை