சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களின் ஆண்மைதன்மை நீக்கம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களின் ஆண்மைதன்மை நீக்கம்

இந்தோனேசியாவில் சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் நபர்களுக்கு இரசாயனம் மூலம் ஆண்மைத்தன்மையை நீக்கும் சட்டமூலத்தில் அந்நாட்டு அதிபர் ஜொகோ விடோடோ கைச்சாத்திட்டுள்ளார்.

அவ்வாறன நபர்கள் பிணையில் வெளியில் செல்ல நேர்ந்தாலும் மின்னணு கண்காணிப்பு சாதனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் 14 வயது சிறுமி ஒருவர் இந்தோனேசியாவின் சுமத்ரா பகுதியில் கூட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் 7 பதின்மவயதினர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர கொலைச் சம்பவத்தை அடுத்தே, இந்தோனேசியாவில் இந்த புதிய சட்டம் அமுலாக்கம் செய்யப்பட்டுள்ளது.