சிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு!

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு!

சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று அனுஷ்டிக்கப்பட உள்ளது.

இன்று முற்பகல் 10 மணியளவில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது. சிறுவர் ஊழியத்திற்கு எதிரான சர்வதேச தினம் கடந்த 12ஆம் திகதி உலகம் முழுவதிலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த தினத்தையொட்டி இலங்கையில் இன்று விசேட வைபவம் நடைபெறவுள்ளது. “உற்பத்தி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுவர் ஊழியத்தை இல்லாதொழிப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

14 வயதுக்கும் குறைந்த சிறுவர், சிறுமியர் எந்தவொரு தொழில்களிலும் ஈடுபடுத்தப்படக் கூடாது எனவும், 14 முதல் 18 வயது வரையிலான சிறுவர்களின் சுகாதாரத்தை, பாதுகாப்பை பாதிக்கும் தொழில்களில் ஈடுபடுத்தக் கூடாது எனவும் இம்முறை தொனிப்பொருளில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஒட்டு மொத்த இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் சிறுவர் ஊழியத்தை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் அவர் தெரிவித்துள்ளார்.