சிவனொளிபாத மலையில் ஏறிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை!


சிவனொளிபாத மலையில் ஏறிய பெண்ணுக்கு பிறந்த குழந்தை!

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய

சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்ற பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.

இரத்தினபுரி பகுதியில் இருந்து வந்த 32 வயதுடைய பெண் சிவனொளிபாத மலை ஏறிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.