சீனாவிடம் இருந்து தூர விலகிச்சென்ற இலங்கை தற்போது நெருங்கி வந்துள்ளது: ரவி கருணாநாயக்க

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சீனாவிடம் இருந்து தூர விலகிச்சென்ற இலங்கை தற்போது நெருங்கி வந்துள்ளது: ரவி கருணாநாயக்க

சீனாவிடம் இருந்து தூரவிலகியிருந்த இலங்கை தற்போது அதன் கொள்கையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

இந்த அறிவிப்பு, இலங்கையில் சீனாவின் முதலீடுகளை அதிகரிப்பதற்கான அறிவிப்பாக இருக்கும் என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்த முதலீட்டாளர் மாநாடு ஒன்றில் உரையாற்றிய ரவி கருணாநாயக்க,

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் இந்த வருட இறுதிக்குள் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை போட்சிட்டி திட்டத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், திட்டத்தில் ஏற்பட்ட காலதாமதங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரஸ்பர உடன்படிக்கை மூலம் தீர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் நடவடிக்கையை போன்றே இலங்கை இந்த விடயத்தில் இடம்பெற்றிருந்த தடைகளை அகற்றுவதற்காக போட்சிட்டி திட்டத்தை இடைநிறுத்தியது எனவும் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்