சீனாவில் 133 பயணிகளுடன் விமானம் விழுந்து பயங்கர விபத்து


சீனாவில் 133 பயணிகளுடன் விமானம் விழுந்து பயங்கர விபத்து

சீனாவில் 133 பயணிகளுடன் வானில் பறந்து கொண்டிருந்த போயிங் ரக விமானம் மலைப் பகுதியில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாகாணத்தின் உஸோ நகர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போயிங் 737 ரகத்தை சேர்ந்த குறித்த விமானம் விழுந்து நொறுங்கியதால் மலைப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்து ஏற்பட்டுள்ள பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.