சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள  பொருளாதார மற்றும் தொழில்நுட்ப புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் அடுத்த வருடம் கைச்சாத்திடவுள்ளோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மீன் இறக்குமதி தடை நீக்கப்பட்டமை போன்று ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றோம்.

சர்வதேச மற்றும் வலய ரீதியாக இலங்கையை தரம் உயர்த்துவதே எமது நோக்கமாகும். இதனை கொண்டு சர்வதேச நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை கைச்சாத்திட திட்டமிட்டுள்ளோம் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.