சீமெந்து தட்டுப்பாட்டுக்க தீர்வு – இலங்கை வந்த இரண்டு கப்பல்கள்


சீமெந்து தட்டுப்பாட்டுக்க தீர்வு – இலங்கை வந்த இரண்டு கப்பல்கள்

எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் சீமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்க பெறும் என சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் 6 லட்சம் சீமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவிலிருந்து வந்த கப்பலில் 2 இலட்சம் சீமெந்து மூடைகளும், பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பலில் 4 இலட்சம் சீமெந்து மூடைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அந்த சீமெந்து மூடைகள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தைகளில் தற்போது சீமெந்து மூடை ஒன்றின் விலை 1375 ரூபாவாக காணப்படுகின்றது.

எனினும், 1500 ரூபாவிற்கும் அதிக விலைகளிலே சீமெந்து மூடைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில விற்பனையாளர்கள் மணல் அல்லது ஏதேனும் கட்டுமான பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே சீமெந்தை விற்பனை செய்வதாக பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.