சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு மகிந்த தேவை என்பது மாயை: மகிந்த அமரவீர

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு மகிந்த தேவை என்பது மாயை: மகிந்த அமரவீர

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்றி அடுத்து நடைபெறும் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என சிலர் கூறினாலும் அது மாயை மாத்திரமே என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரான அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொகுதி வாரியாக நடத்தப்படுவதால், ஒருவரே ஒரு தொகுதியில் தெரிவு செய்யப்படுவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முன்னோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகிய மூன்று பேரும் ஒன்றிணைய வேண்டும்.

எது எப்படி இருந்த போதிலும் மகிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகியோர் மீது கை வைக்க இந்த அரசாங்கத்திற்கு இடமளிக்க போவதில்லை எனவும் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.