செல்வந்தரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆசைகளை நிறைவேற்றி வந்த முகாமையாளர்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


செல்வந்தரின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தி ஆசைகளை நிறைவேற்றி வந்த முகாமையாளர்

நாற்பது வயதுப் பெண்ணிடம் சுமார் 150 இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பணத்தை கப்பமாகப் பெற்று தனது ஆசைகளை நிறைவேற்றி வந்த இளைஞனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த இளைஞனின் தொல்லை தாங்க முடியாது 40 வயது பெண் தனது கணவனிடத்தில் விபரங்களைக் கூறி,  குருநாகல் பொலிஸ் நிலையத்தில் கணவனுடன் சென்று செய்த முறைப்பாட்டை அடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குருநாகல் பகுதியில் உணவகமொன்றில் முகாமையாளராக பணியாற்றும் மேற்படி 28 வயதுடைய இளைஞனுக்கும் அவ் உணவகத்திற்கு அடிக்கடி வரும் குருநாகல் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவரது 40 வயதுடைய மனைவிக்குமிடையே தகாத உறவு இரகசியமாகப் பேணப்பட்டு வந்துள்ளது.

காலப்போக்கில் அதனைப் பயன்படுத்தி அப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படத்தையும் எடுத்துள்ள இளைஞன், குறித்த பெண்ணை மிரட்டி சிறிது சிறிதாக ஆரம்பித்து பாரிய தொகைப் பணத்தை பெண்ணிடம் இருந்து கப்பமாகப் பெற்றுள்ளான்.

இவ்விளைஞனின் தொல்லைக்குப் பயந்து தனக்குச் சொந்தமான காணி ஒன்றைக் கூட அப் பெண் விற்பனை செய்து இளைஞனுக்குப் பணம் வழங்கியதாக தெரியவருகிறது.

இதேவேளை, கண்டி அம்பிட்ய பகுதியில் ஹோட்டல் ஒன்றையும் சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றையும் குறித்த இளைஞன்  கொள்வனவு செய்துள்ளார்.

இதையடுத்து கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து மோட்டார் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 40 இலட்சம் ரூபா எனத் தெரியவருகிறது.

இது தவிர கண்டி அம்பிட்ய பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றை கொள்வனவு செய்துள்ளமையும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாயாவார். இச் சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிசார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.