புதிய அமைச்சர்களுக்கு சொகுசு வீடுகள் – பழைய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு நீடிப்பு


புதிய அமைச்சர்களுக்கு சொகுசு வீடுகள் – பழைய அமைச்சர்களுக்கு பாதுகாப்பு நீடிப்பு

அண்மையில் அரசாங்கத்தில் இருந்து விலகிய சுமார் 20 முன்னாள் அமைச்சர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட வீடுகளில் இருந்து இன்னும் வெளியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த முன்னாள் அமைச்சர்களை உடனடியாக தமது வசிப்பிடங்களை விட்டு வெளியேறுமாறு அண்மையில் பணிப்புரை விடுத்திருந்தது.

புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட உள்ளதால், முன்னாள் அமைச்சர்கள் வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, அரசாங்கத்தில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பல்வேறு போராட்டக்காரர்களின் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது.