சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் கைது

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் கைது

மத்திய அரசுக்கு எதிராக பேரணியாக சென்று பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பொலிஸார் கைது செய்து, பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் இன்று பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

 

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

அவர்கள் பாராளுமன்றத்தை நெருங்காத வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த வேலிகளை கடந்து முன்னேறிச் செல்ல முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட காங்கிரசார் முயன்றனர்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரை பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.