ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நல்லாட்சி

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனநாயக உரிமைகளை பறிக்கும் நல்லாட்சி

அரசாங்கம் கோரிக்கைகளுக்கு நியாயமான பதில் வழங்குவதை ஒதுக்கி வைத்து விட்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள் மீது அடக்குமுறையை ஏவி, தொழிலாளர்களின் உரிமைகளை அடக்க முயற்சித்து வருவதாக தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள துமிந்த நாகமுவ, கல்விசார ஊழியர்கள் முன்வைத்துள்ள சம்பளப் பிரச்சினைக்கு நியாயமான பதில் கிடைக்காத காரணத்தினால், அவர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் 7 நாட்களையும் தாண்டி நடந்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

பணிக்கு திரும்பாத கல்விசார ஊழியர்கள் தாங்களே பணியில் இருந்து விலகி சென்று விட்டதாக கருதப்படுவர் என உயர்கல்வி அமைச்சு நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

1980 ஆம் ஆண்டு ஜூலையில் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் போதும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இப்படிதான் நடந்து கொண்டது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதியும் பிரதமரும் ஜனநாயகம் குறித்து பல்வேறு வாக்குறுதிகளை சமூகத்திற்கு வழங்கினர்.

பணிப்புறக்கணிப்பு போராட்டம் என்பது அடிப்படை உரிமை. அந்த உரிமையை பறிப்பது தெளிவான ஜனநாயக விரோத செயல் எனவும் துமிந்த நாகமுவ தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்