ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதியின் இணையத்தை முடக்கியவர்கள் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இணையத்தளத்தை ஹேக் செய்த இரு இளைஞர்களையும் பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டார்.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தை ஹேக் செய்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களில் 17 வயது மாணவரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டிலும், 27 வயதான இளைஞரை 10 இலட்சம் ரூபா சரீரப் பிணை நான்கும், 25 000 ரூபா ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் இன்று நீதவான் கிஹான் பிலப்பிட்டிய முன்னிலையில் ஆஜர்படுத்திபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.