ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்திற்குள் நுழைந்தவர்கள் இன்னும் பிடிப்படவில்லை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்திற்குள் நுழைந்தவர்கள் இன்னும் பிடிப்படவில்லை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான (president.gov.lk)மீது அத்துமீறி உள்நுழைந்த குழு தொடர்பில் இதுவரை எந்த தகவலும் அறியமுடியவில்லை என்று ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஹேக்கர் குழு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்து அறிக்கை சமர்ப்பிக்கும் படி ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினரால் குற்றப்புலனாய்வு பிரதானிக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஹேக்கர் குழுவினர் ஜனாதிபதியின் இணையத்திற்குள் நுழைந்ததுடன், தாம் பங்களாதேஸை சேர்ந்தவர்கள் என்றும், அறிவிப்பு ஒன்றையும் விடுத்திருந்தனர்.

இதேவேளை, இந்த இணையத்தின் கட்டுபாடு தற்போது இலங்கை அதிகாரிகளின் கீழ், கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த குழுவினர் தொடர்பானவிசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இது சம்பந்தமான 3 இடங்கள் தற்போது அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி ஒருவர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.