விமல், கம்மன்பில, வாசுதேவ நீக்கப்படுவார்களா? ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு


விமல், கம்மன்பில, வாசுதேவ நீக்கப்படுவார்களா? ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு

அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

கூட்டுப் பொறுப்பில் எடுக்கப்படும் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பின் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பதிலாக அதிலிருந்து விலகி அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துவதே சிறந்ததென ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பிரேமதாஸவின் ஆட்சிகாலத்தில் கூட்டுப் பொறுப்பை மீறியமை தொடர்பில் லலித் அத்துலத்முதலி மற்றும் ஜி.எம். பிரேமசந்திர ஆகிய அமைச்சர்களுக்கு எதிரான வழக்கில் நீதிபதி மார்க் பெர்னாண்டோ வழங்கிய தீர்ப்பை ஜனாதிபதி நினைவு கூர்ந்தார்.