ஜனாதிபதி இன்று வௌியிட்ட மற்றொரு அறிவிப்பு


ஜனாதிபதி இன்று வௌியிட்ட மற்றொரு அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை பதவி விலக கோரியதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டு ஊடக அறிக்கையொன்றில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாகவும், பல செயற்பாடுகளில் அவருக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பாரிய பொருளாதார சவால்களுக்கு பதிலளிக்கும் பலம் தமக்கு இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, இவ்வாறான பொய்களை கண்டு மனம் தளராமல், நாட்டின் ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்காக தனது அனைத்து முக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு மத்திய வங்கி ஆளுநருக்கு தனிப்பட்ட முறையில் அறிவித்துள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.