ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடித் தீர்மானத்தை அறிவித்தார் மைத்திரி


ஜனாதிபதி எடுத்துள்ள அதிரடித் தீர்மானத்தை அறிவித்தார் மைத்திரி

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் 11 சுயாதீன அரசியல் கட்சிகளுடனான சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் நியமனம் என்பன அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைக்கால அரசாங்கம் உருவாக்கத் தயார்; ஜனாதிபதி அறிவிப்பு