முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரோடு கிருலப்பனையில்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரோடு கிருலப்பனையில்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிருளப்பனை மே தின ஊர்வலம் உழைக்கும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறந்த மே தின ஊர்வலம் என, பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் கிருளப்பனையில் இடம்பெறும் இந்த மே தின ஊர்வலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் கலந்து கொள்வார் எனவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் காலியில் இடம்பெறவுள்ள மே தின ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.

(அத தெரண)