ஜனாதிபதி மீது நிதிக் குற்றச்சாட்டு நியாயமானது அல்ல

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜனாதிபதி மீது நிதிக் குற்றச்சாட்டு நியாயமானது அல்ல

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின்செலவுகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது குறித்து சில நபர்கள்பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவது நியாயமானது அல்ல என மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில்ஜனாதிபதியின் செலவு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தையும்முதலமைச்சர் விளக்கியுள்ளார்.

ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஆயிரத்து 811 மில்லியன் ரூபா ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களது சம்பளத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயிரத்து 100 மில்லியன் தாமரை தடாகம் உட்பட 7 நிறுவனங்களுக்காகஒதுக்கப்பட்டுள்ளது. 42 மில்லியன் ரூபா முன்னாள் ஜனாதிபதிகளின் செலவுகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தனிப்பட்ட தேவைகளுக்காக அவருக்கான நிதி ஒதுக்கீடுஅதிகரிக்கப்படவில்லை. நாட்டுக்கான அர்ப்பணிப்புடன் செயற்படும் இப்படியான தலைவர் குறித்து புரிந்து கொள்ளாது சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவது அடிப்படையற்றது.

அதேபோல் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாகவும் சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். நாட்டுக்கு சுமை இல்லாத வகையில் ஜனாதிபதி வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்கிறார்.

அந்த காலத்தில் சிறிமாவே பண்டாரநாயக்க மீது இப்படியான குற்றச்சாட்டுமுன்வைக்கப்பட்டது. நாடு குறித்து சிந்திக்கும் சிறந்த ஆட்சியாளர்கள் இவ்வாறானகுற்றச்சாட்டுக்களை கவனத்தில் கொள்ள தேவையில்லை.

மேலும் கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடும் போது நாட்டின் அபிவிருத்தி சிறந்த வழிக்கு திரும்பியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி நாட்டை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் இசுரு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்