ஜப்பானை அடுத்து ஈக்வடோரிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜப்பானை அடுத்து ஈக்வடோரிலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

ஈக்குவடோரில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

ஈக்குவடோர் நகரான குஆயாகில்லில் 7.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக பாரிய பாலம் ஒன்று தகர்ந்து வீழ்ந்துள்ளது.

பாலம் தகர்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு வைத்தியசாலை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பாலம் தகர்ந்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் தகர்ந்த பாலத்தின் இடிபாடுகளில் சிக்கியிருக்கும் வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீயணைப்புப் படையினர் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.