ஜே.வி.பி தலைவர் மக்களை ஏமாற்றுகின்றார்:சம்பிக்க ரணவக்க

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


ஜே.வி.பி தலைவர் மக்களை ஏமாற்றுகின்றார்:சம்பிக்க ரணவக்க

ஜே.வி.பி தலைவர் மக்களை ஏமாற்றுகின்றார் என மேல்மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நோக்கில் நேற்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

கடந்த 5ம் திகதி நாடாளுமன்றில் குறைநிரப்புப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்தப் பிரேரணையில் 55 மில்லியன் ரூபா என எழுத்திலும் இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது பற்றி தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் குறைநிரப்புப் பிரேரணை தொடர்பில் ஜே.வி.பி தலைவர் எந்தவிதமான தகவல்களையும் அரசாங்கம் வழங்கவில்லை என பொய்யுரைத்து மக்களை பிழையாக வழிநடத்துகின்றார் என சம்பிக்க குற்றம் சுமத்தியுள்ளார்.