டெல்லி அணியை துவம்சம் செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

Tamil Breaking News Today – தமிழ் செய்திகள் இன்று


டெல்லி அணியை துவம்சம் செய்தது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த 2-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில்வெற்றி பெற்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
துவக்க ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து வெளியேற துவக்கத்திலேயே டெல்லி அணி ஓட்டங்கள் குவிக்க திணறியது.

தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் எவரும் குறிப்பிடத்தக்கவகையில் அணிக்கு வலு சேர்க்க தவறியதால் அ17.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும்இழந்து 98 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

கொல்.கத்தா அணி சர்பாக அபாரமாக பந்து வீசிய றஸ்ஸல் (3) ஹோக்(3) மற்றும் ஹாஸ்டிங், சாவ்லா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 99 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராபின் உத்தப்பா மற்றும் அணித்தலைவர் கவுதம்கம்பீர் ஆகியோர் டெல்லி அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.

33 பந்துகளில் 35 ஓட்டங்கள் குவித்து கொல்கத்தா அணிக்கு நல்லதுவக்கத்தை ஏற்படுத்திய ராபின் உத்தப்பா மிஷ்ராவின் பந்து வீச்சில் மோரிசிடம் தனது விக்கெட்டைஇழந்தார்.

இதனையடுத்து கவுதம் கம்பீருடன் ஜோடி சேர்ந்த பாண்டே கொல்கத்தாஅணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

14.1 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ஓட்டங்களைகுவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளது.

24 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து முக்கியமான 3 விக்கெட்டுகளை சாய்த்த றஸ்ஸல் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.